• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

யோகா

யோகா என்பது உடலும், மனதும் இனணந்து மேற்கொள்ளப்படும் ஒரு பயிற்சியாகும். இது உடலை வெவ்வேறு தோரணைகளிலும், நிலைகளிலும் வைத்திருப்பதின் வழியாக செய்யப்படுகிறது .

யோகா என்பது மிகவும் நுட்பமான அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக ஒழுக்கமாகும். இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு கலை மற்றும் மனதுக்கும் உடலுக்கும் இடையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது.

யோக சாஸ்திரங்களின்படி, யோகாவின் பயிற்சியானது பிரபஞ்ச உணர்வுடன், நமது தனிப்பட்ட உணர்வை ஒன்றிணைக்க வழிவகுக்கிறது, இது மனம், உடல், மனிதன் மற்றும் இயற்கைக்கு இடையே ஒரு சரியான இணக்கத்தைக் உருவாக்குகிறது.

பிராணாயாமம் என்பது மூச்சைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்தும் யோகப் பயிற்சியாகும்.

மனிதன் சுவாசிக்கும் மூச்சானது, முதலில் சுவாசப்பையினை இயக்க செய்கிறது. சுவாசப்பை இதயத்தை இயக்குகிறது. இதயமானது நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக இயங்கசெய்கிறது.இந்த சீரான ரத்த ஓட்டமானது மூளைக்குச் சென்று அதனை சீராக இயங்க செய்வதன் மூலம், நமது மனதானது மூளையின் கட்டளையின் மூலம் உடல் சீர்கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கின்றது.

யோகாவின் பலன்கள்

  • யோகா ஆழ்ந்த சுவாசம், தியானம், மனஅமைதி மற்றும் நினைவாற்றல் அம்சத்துடன் இணைந்த வலிமையான உடல் இயக்கத்தையும் கொண்டுள்ளது.
  • இது உடலில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதன் மூலம், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்துடன் இருக்க உடல் ரீதியாக நமக்கு உதவுகிறது.
  • கூடுதலாக, காலப்போக்கில் நிகழும் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி மேம்பாடுகள் விலைமதிப்பற்றவை.
  • நமது உடல் இயக்கம் திறமையாக செயல்பட, நெகிழ்வுத்தன்மை அவசியம். இந்த நெகிழ்வுத்தன்மையை நம் உடலுக்கு யோகா அளிக்கிறது
  • உடல் வளைந்து கொடுக்கும் தன்மை நம் எலும்புகளையும், தசைகளையும் வலுப்படுத்தி நமது மூட்டுகளை பலப்படுத்துகிறது.
  • யோகா நிலைகள் உடல் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
  • யோகா நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்கும் தன்மை கொண்டதால் உடல் வயதான தோற்றத்திற்கு போவதை தடுக்கிறது
  • யோகா நம் உடலில், மன அழுத்த ஹார்மோன்களைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் எண்டோர்பின்கள் மற்றும் காபா ( GABA – gamma-aminobutyric acid ) போன்ற நன்மை பயக்கும் மூளை இரசாயனங்களை அதிகரிக்கிறது. இந்த நல்ல இரசாயனங்கள் கவலையைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
  • யோகா தசை வலிமையை உருவாக்குகிறது.
  • யோகாவை நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவதின் மூலம் நமது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வயதாவதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.
  • உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை எந்த நோயாக இருந்தலும் உடலையும், மனதையும் பலப்படுத்தி அந்த நோயை குணப்படுத்த யோகா உதவுகிறது.
×