இவையே மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை பாதிக்கப்படுகின்றன.
உள்ளங்கைகள், விரல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த புள்ளிகளைத் தூண்டி நோய்களைக் குணப்படுத்துவதே வர்மம் மருத்துவ முறையின் அடிப்படை நோக்கமாகும்.
இவை ஆற்றலைத் தூண்டவும், நோயைக் குணப்படுத்தவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டவும் பயன்படுத்தப்படுகின்றன.
வர்மம் என்பது மசாஜ், மாற்று மருத்துவம், பாரம்பரிய யோகா மற்றும் தற்காப்புக் கலைகளை ஒருங்கிணைக்கிறது.