One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.
யுனானி (UNANI)
யுனானி மருத்துவம் என்பது தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள முஸ்லீம் கலாச்சாரத்தில் நடைமுறையில் உள்ள பெர்சோ-அரேபிய பாரம்பரிய மருத்துவமாகும். இந்த பெர்சோ-அரேபிய மருத்துவ முறை கிரேக்க மருத்துவர்களான ஹிப்போகிரட்டீஸ் மற்றும் கேலன் ஆகியோரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது.
யுனானி மருத்துவம் நான்கு தோஷங்களை அடிப்படையாகக் கொண்டது:
சளி (Phlegm)
இரத்தம் (Blood)
மஞ்சள் பித்தம் (Yellow bile)
கருப்பு பித்தம் (Black bile)
இது ஊக்குவிப்பு (Promotive), தடுப்பு (Preventive), சிகிச்சை (Curative) மற்றும் மறுவாழ்வு (Rehabilitative) என்ற உடல் நல சேவைகளை நமக்கு வழங்குகிறது.
யுனானி மருத்துவத்தின் அடிப்படையான , நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் அறிவியல் கோட்பாடுகளை பின்பற்றி இருப்பது மட்டுமல்லாமல், மனிதனை முழுமையாக குணப்படுத்துதல் ( Holistic concept ) கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை.
அதன்படி, இது ஒரு நபரின் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஆரோக்கியத்தை வலியுறுத்துகிறது.
நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில், நோயாளியின் குணாதிசயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நபரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை அவசியம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.
சிகிச்சை
யுனானி மருத்துவர்கள் ஒருவரது உடல்நலம் மற்றும் நோய் இரண்டிலும் உணவு மற்றும் செரிமான நிலைக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நோயாளிகளின் குணத்திற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் போது குறிப்பிட்ட உணவு முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. முறையான உணவுகள் நல்ல தோஷங்களை ( Akhlā\Ṣāliḥa ) உருவாக்கும் என்று கருதப்படுகிறது, அதே சமயம் முறையற்ற உணவுகள் மோசமான தோஷங்களை ( Akhlā\ Radiyya ) உருவாக்குகின்றன. எனவே, சரியான உணவு மற்றும் மருந்து மூலம் தோஷங்களின் சமநிலையின்மையை சரி செய்ய முடியும்.
பாரம்பரிய யுனானி மருத்துவம் பல்வேறு நாள்பட்ட மற்றும் கடுமையான நோய்களுக்கான சிகிச்சையில் நிருபிக்கப்பட்ட “ரெஜிமென்ட்” சிகிச்சைகள் (Tadapir) பரிந்துரைக்கப்படுகிறது.
தலாக் (Massage)
ஹம்மாம் (Bath and Sauna)
காரட் (Exercise)
ஃபாஸ்ட் (Venesection - இரத்தத்தை வெளியேற்ற ஒரு நரம்பைத் வெட்டி திறப்பது)
ஹிஜாமத் (cupping - உடலின் மேற்பரப்பில் இரத்தத்தை இழுப்பதற்கு கண்ணாடி கோப்பை அல்லது குழாயைப் பயன்படுத்துதல்)
அமாட்-இ-காய் (Leaching - இரத்தம் உறிஞ்சும் அட்டைகளை பயன்படுத்தி இரத்தத்தை உறிஞ்சுவது).
இதில் உடலில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுவது என்பது அசுத்தமான இரத்தம் அல்லது அசுத்தங்களை அகற்றுவதே இந்த செயல்முறைகளின் நோக்கம்.