Dr. S. நமசிவாயம், M.B.B.S., D.C.H., குழந்தைகள் மருத்துவர் அவர்களால் 1960 களில் குழந்தைகள் நல மருத்துவமனையாக “சிவா மருத்துவமனை” தொடங்கப்பட்டது.
குழந்தைகள் மருத்துவத்தில் தனி முத்திரையையும், கைராசி மருத்துவர்என பெயர் பெற்ற அவருக்கு, 1975 ம் வருடத்தில் அவருக்கு, அவருடைய நோயாளி ஒருவரின் வாயிலாக “மருத்துவ அதிசியம்” (Medical miracle) ஒன்றை காண நேர்ந்தது.
அவருடைய ஆங்கில மருத்துவ அறிவு மற்றும் அனுபவ அறிவின்படி குணப்படுத்தவே முடியாது என பட்டியலிடப்பட்ட பல நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பிறந்ததில் இருந்ததே அவதிப்பட்டுக் கொண்டிருந்த 10 வயதுடைய, அவருடைய நோயாளி, ஹோமியோ மருத்துவத்தால் பூரணமாக குணமானதை கண்டார்.
