• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

ஹோமியோபதி

உலக அளவில் பரந்து விரிந்துள்ள ஹோமியோபதி மருத்துவமுறை, உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமாகும். நமது நாட்டில் நடத்திய ஆய்வில், 90 சதவீத மக்கள் ஹோமியோபதியை நம்பகமான சிகிச்சை முறையாகக் கருதுகின்றனர்.

ஹோமியோபதி “ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும்” (அதாவது `முள்ளை முள்ளால் எடுப்பது போல) என்ற கோட்பாட்டின்படி இயங்கும் முறையாகும்.

இதன் பொருள் “ஒரு நோய்க்கு, அந்த நோயை போன்றே ஒத்த அறிகுறிகளை உருவாக்கும் பொருட்களை, மருந்தாக விரியப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் போது அந்த நோய் குணமாகின்றது”.

 

இதற்கு உதாரணமாக, வெங்காயம் உரிக்கும் போது, தொடர் தும்மல், கண் மற்றும் மூக்கிலிருந்து தண்ணீர் தாரை தாரையாக கொட்டுவது, தொண்டை கரகரப்பு, மூக்கு மற்றும் கண் அரிப்பு போன்றவை ஏற்படும்

நமக்கு சளி பிடித்த உடன், ஆரம்ப நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் நமக்கு தோன்றும்.

அந்த நிலையில், ஹோமியோ மருத்துவத்தில், வெங்காயத்தில் இருந்து விரியப்படுத்தி எடுக்கப்பட்ட, Allium cepa என்ற மருந்து கொடுக்கப்பட்டு, சளி குணப்படுத்தப்படுகிறது.

இதைப் போலத்தான் ஹோமியோ மருத்துவத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மருந்துகள், மனிதர்களுக்கு கொடுத்து, “மருந்துகளை நிரூபித்தல்” (Drug provin) என்ற முறைப்படி நிரூபிக்கப்பட்டு, சாதாரண சளி முதல் கேன்சர் வரை என அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது.

ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்க தாவரங்கள், இயற்கையான பொருட்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், தாதுக்கள், கனிமங்கள், உலோகங்கள் மற்றும் பாம்பின் விஷம் எனப் பல்வேறு பொருள்களிலிருந்து ஹோமியோபதி மருந்துகளுக்கான மூலக்கூறுகள் பெறப்படுகின்றன.

நோய்களுக்கான மருந்து என்பதைத் தவிர்த்து, ஒவ்வொரு மனிதருக்குமான மருந்து [ Holistic approach ]என்ற முறையில் நோயாளிகளை அணுகக்கூடியது.

ஒவ்வொரு நோயாளிக்கும், முதலில் மனம் சார்ந்த அறிகுறிகளுக்கும், அடுத்து தான் உடல் சார்ந்த அறிகுறிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, மருந்தை தேர்வு செய்து கொடுத்து குணமாக்குவது என்பது உலகத்தில் உள்ள மருத்துவ முறைகளில் எதிலுமே இல்லாத தனிச்சிறப்பு.

உதாரணமாக நீண்டநாள் தலைவலிக்கு, 100 பேர் வைத்தியத்திற்கு வந்தாலும், மற்ற மருத்துவமுறை போல, அனைவருக்கும் ஒரே மாதிரியான மருந்து கொடுத்து குணப்படுத்த முடியாது. ஹோமியோ மருத்துவத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மருந்து தேவைப்படும். இதற்கு காரணம் தலைவலியை அனைவரும் ஒரே மாதிரி இல்லாமல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர் கொள்ளுவார்கள்.

போன்ற ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஒவ்வொருவர் மனதில் தோன்றும். இது தான் மனித இயல்பு. இதே போல தான் ஒரே நோய்க்கு, ஒவ்வொருவர் உடலும் வெவ்வேறு விதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

ஒவ்வொருவருடைய இந்த தனித்துவமான மன அறிகுறிகளுடன், உடல் அறிகுறிகளையும் சேர்த்து ஆராய்ந்து, மருந்தை தேர்வு செய்து கொடுக்கும் போது தான் பூரண குணம் கிடைக்கின்றது.

இதைப் போலத்தான் ஒவ்வொரு நோயாளியையும் ஹோமியோ மருத்துவம் அணுகுகின்றது.

ஹோமியோபதியின் நன்மைகள்:

×