• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

குழந்தைகளின் குடல் இறக்கம் (Hernia in children)

குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் பல குறைபாடுகளில் முக்கியமான ஒன்று ஹெர்னியா எனப்படும் குடல் இறக்கம் ஆகும்.

அடிவயிற்றில் உள்ள குடலின் ஒரு பகுதியோ அல்லது அதனைச் சார்ந்த பகுதிகளோ ஏதாவது ஒரு சிறிய திறப்பின் வழியாக பிதுங்கி வெளி வருவதே குடல் இறக்கம் (Hernia) எனப்படுகின்றது.

குழந்தைகள் பிறக்கும் போதோ (Congenital Hernia), அல்லது குழந்தைகள் வளரும் போதோ குடல் இறக்கம் ஏற்படலாம். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கே அதிகம் காணப்படும், இந்தக் குறைபாட்டினால், சுமாராக ஆயிரம் குழந்தைகளுக்கு இருபது குழந்தைகள் என்ற விகிதத்தில் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு முதல் வருடம் முடிவதற்கு உள்ளாகவே, குறிப்பாக பிறந்த ஆறு மாதங்களிலேயே இந்த குறைபாட்டின் அறிகுறியை காண முடியும்.

இடது பக்கத்தை (30 %) விட வலது பக்கமே (60 %) அதிகம் காணப்படும் குடல் இறக்கத்தில், சில குழந்தைகளுக்கு இருபுறமும் (10%) காணப்படுவதும் உண்டு. பொதுவாக குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு (Premature Infants) இந்தக் குறைபாடு அதிகமாக காணப்படுகின்றது.

எப்படி ஏற்படுகின்றது?

குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அல்லது குழந்தை பிறந்த உடன், குழந்தையின் அடிவயிற்றில் இரு புறமும் இருக்கும் இங்குனைல் கேனல் (Inguinal Canal) எனப்படும் திறப்பின் வாய்ப்பகுதி, இயல்பாகவே சவ்வினால் மூடப்பட்டுவிடும். இந்த சவ்வுகள் மூடப்படாமல் தளர்ச்சி அடையும்போது குடல் இறக்கம் ஏற்படுகின்றது.

குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் (Chronic Cough), சிறுநீர் தாரையில் (Urithra) அடைப்பு இருப்ப தால் சிறுநீர் கழிக்கும்போது திணறுவது, மலச்சிக்கல் காரணமாக மலம் கழிக்க முக்குவது போன்ற பல காரணங்களினால், அடிவயிற்றின் உள்ளே உள்ள அழுத்தம் (Intra Abdominal Pressure) அதிகரிப்பதால், புற சவ்வுகள் தளர்ச்சி அடைந்து குடல் இறக்கம் ஏற்பட வழி வகுக்கின்றது.

அறிகுறிகள்

குழந்தையின் பெற்றோர்களினால் முதலில் எளிதாக அறியக்கூடிய அறிகுறி, குழந்தையின் தொடையின் உள் பக்கமும், அடி வயிறும் சேரும் இடத்தில் வலது அல்லது இடது புறமாக சிறிய கோலிக் குண்டு அளவிலான வீக்கம் தென்படும். இந்த வீக்கம் தொடர்ச்சியாக எப்போதும் ன் காணப்படாது. குழந்தை அழும்போது, சிறுநீர் அல்லது மலம் கழிக்க முக்கும் போது இந்த வீக்கம் நன்றாகத் தெரியும்.

பெரிய குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்டும்போது, ஏதாவது கனமான பொருளை தூக்கும்போது சிறிது கடினமான வேலை அல்லது உடற்பயிற்சி செய்யும்போது இந்த வீக்கம் காணப்படும். குழந்தை படுத்து இருக்கும்போது இந்த வீக்கம் இருந்த அறிகுறி சிறிதும் இருக்காது.

கைக்குழந்தையாக இருந்தாலும் சரி, பெரிய குழந்தையாக இருந்தாலும் சரி குடல் இறக்கத்தின் ஆரம்ப நிலையில் மட்டுமே சிறிது வலி காணப்படும். பின்பு இந்த வீக்கத் தினால் வலி இருக்காது, நாட்கள் செல்லச் செல்ல, இந்த வீக்கம் பெரிதாவதோடு சிறிது சிறிதாக விதைப்பைக்குள் இறங்க ஆரம்பிக்கின்றது.

மிகப் பெரிதான குடல் இறக்கத்தில், அடைப்பு (Obstructed Hernia) அல்லது முறுக்கிக் கொள்ளுதல் (Strangulated Hernia) போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு, உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். இந்த நிலையில் கடுமையான வலி, அடிவயிறு பெரிதாகி வீங்கிக் காணப்படுவது, வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும்.

அறுவை சிகிச்சை தேவையில்லை

ஒருங்கிணைந்த மருத்துவத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் இறக்கத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் முழுமையாக சரிசெய்ய முடியும்.

குழந்தைகளுக்கு குடல் இறக்கத்தின் அறிகுறி தெரிய ஆரம்பித்த உடன் தாமதிக்காமல் இந்த மருந்துகள் கொடுக்கும்போது ஆறு மாதங்களுக்குள் இந்தக் குறைபாட்டை சரி செய்ய முடியும். குடல் இறக்கம் ஆரம்பித்து வெகுநாட்கள் கழித்து அல்லது வெளிப்புறம் தெரியும் வீக்கத்தின் அளவு பெரிதாகி இருக்கும்போது ஒருங்கிணைந்த மருந்துகளை மேலும் சில மாதங்கள் கொடுக்க வேண்டி வரலாம். வீக்கம் மிகவும் பெரிதாகவோ, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய நிலையில் இருந்தாலோ, மருந்துகள் சாப்பிட்ட பின்பும் சில மாதங்களில் முன்னேற்றம் தெரியாமல் இருந்தாலோ அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியாமல் போகின்றது.

குடல் இறக்கத்தை சரி செய்யும் ஒருங்கிணைந்த மருந்துகளின் செயல்பாடு இரண்டு விதங்களில் அமைகின்றது.

  • அடிவயிற்றின் உள்ளே உள்ள அதிகப்படியான அழுத்தத்தை குறைப்பதின் மூலம் குடல் பிதுங்கி வெளி வருவதை தடுக்கின்றது
  • குடல் பகுதி பிதுங்கி வெளி வரும் திறப்பின், வாய்ப் பகுதியில் உள்ள தளர்ந்து காணப்படும் ஜவ்வுகளை பலப் படுத்துகின்றது.

குடல் இறக்கத்தை சரி செய்யும் ஒருங்கிணைந்த மருந்துகளின் செயல்பாடு சிறிது மெதுவாகத்தான் இருக்கும். சில குழந்தைகளுக்கு முன்னேற்றம் தெரிவதற்கு ஓரிரு மாதங்கள் கூட ஆகலாம். முதலில் அடிக்கடி குடல் பகுதி பிதுங்கி வெளி வருவது குறைய ஆரம்பித்து, எப்போதாவதுதான் வெளிப்புறம் தெரியும். பின்பு படிப்படியாக அதுவும் குறைய ஆரம்பித்து, ஒரு நிலையில் குழந்தைக்கு குடல் இறக்க அறிகுறி சிறிதும்

இல்லாமல் பூரணமாக குணமடைவது மட்டுமல்லாமல், இந்த குறைபாடு திரும்ப வராமலும் இந்த ஒருங்கிணைந்த மருந்துகள் தடுக்கின்றன.

<சில குழந்தைகளுக்கு குடல் இறக்கம் மற்றும் விரைவாதம் என இரண்டு குறைபாடுகளும் இருக்கும். அந்த குழந்தைகளுக்கு, ஒரே சமயத்தில் இரண்டு குறிப்பாடுகளுக்குமே மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம்./p>

குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கு ஏற்படும் குடல் இறக்கத்தையும் ஆரம்ப நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவத்தால் பூரணமாக சரி செய்ய முடியும்.

×