• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

முடி கொட்டுதல்

இயற்கை அளித்த அழகிய மணிமகுடம் (Crowning Glory) என அழைக்கப்படும். தலைமுடியை பொருத்த மட்டில் முடி கொட்டுவது தான் தலையாய பிரச்சனை. முடி கொட்டுவதற்கான சில உண்மைகளையும், தீர்வுக்கான வழிமுறைகளையும் சற்று பார்ப்போம்.

முடியின் ஆயுள்:

நம் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கை சுமாராக 90000 முதல் 140000 வரையிலும், மாதத்திற்கு 1/2 -1 இன்ச் நீளமும் வளர்கின்றது.

தினமும் தலையிலிருந்து, நம் கண்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ 20 முதல் 50 வரை பழைய முடிகள் உதிர்ந்து, மறுசுழற்சி முறையில் புதிய முடிகள் தோன்றுகின்றன.

வயது அதிகமாக அதிகமாக இயல்பாகவே முடியின் வளர்ச்சி அளவு குறைவதுடன், முடி விழுந்த வேர்க்கால்களில் இருந்து மறுசுழற்ச்சியாக புதிய முடிகள் முளைக்காமல் போவது மற்றும் முடியின் தடிமன் குறைந்து, மெலிந்து போய் விடுவதால் தான் தலைமுடியின் அடர்த்தி குறையத் தொடங்குகின்றது.

காரணங்கள்:

சிறு வயதிலேயே பரம்பரை காரணம் எனப்படும் நமது முன்னோர்கள் வழியிலியே, ஆண்களுக்கு வயதான பின்பு கொட்ட வேண்டிய முடி, இள வயதிலேயே அதிகமாகவும், வேகமாகவும் கொட்ட ஆரம்பித்து, தலை வழுக்கை ஆகி விடுகின்றது.

ஆண்களுக்கு இளவயதிலேயே தலை வழுக்கை ஆவது என்?

பரம்பரையாக முடி கொட்டுவது தான் காரணம், சரி வயதான பின்பு தானே முடி கொட்ட ஆரம்பிக்க வேண்டும், உண்மை தான், ஆனால் முன்பு எல்லாம், 60 வயதில் கொட்ட ஆரம்பித்த முடி, சிறிது சிறிதாக 40,.20 வயது என குறைந்து, இப்போது பலருக்கு பள்ளிக்கூடம் போகும் வயதிலேயே முடி கொட்ட ஆரம்பித்து, கல்லூரி முடிப்பதற்குள் தலை முழுவதும் வழுக்கை ஆகி விடுகின்றது.

பரம்பரையாக முடி கொட்டுவது வயதில் வேண்டுமானலும் ஆரம்பிக்கலாம். கொட்ட ஆரம்பித்த பின்பு தலைமுடியை முழுமையாக காலி செய்து, தலையை பாலைவனமாக்கி விட்டு தான் நிற்கும்.

பரம்பரையாக முடி கொட்டுவது சீக்கிரமாகவே ஆரம்பிப்பதற்கான காரணம், நம்முடைய அவசரமான வாழ்க்கை முறையும், நமது அத்தியாவசிய தேவைகளான சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் நீர் போன்றவற்றில் கலந்துள்ள இராசயனங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போவதும், நமது உடலில் சுரக்கின்ற சில ஹார்மோன்களின் அதிக படியான செயல்பாடுகளும் தான் முக்கிய காரணங்கள்.

சில கடுமையான உடல் குறைவுகளுக்கு பின்பு டைபாய்டு சுரம், டெங்கு, அம்மை, நிமோனியா, புளு சுரம், வயிற்றுப்போக்கு, முக்கியமாக தற்போது கொரோனா போன்ற நோய்கள் வந்து போன பின்பு கடுமையான முடி உதிர்வு ஏற்படும்.

தலையின் தோலில் சுரக்கும் சீபம் எனப்படும் எண்ணெய் பொருள் அதிகமாக சுரப்பதால் அவை முடியின் வேர்கால்களின் அடைத்துக் கொண்டு முடிவளர்வதை தடுக்கின்றது. இதை தான் பொடுகு என்கின்றோம்.

பெம்பாலானவர்கள் முடி கொட்டுவதற்கு காரணமாக காட்டுவது தண்ணீரை தான். தண்ணீரில் உள்ள அமிலகாரத் தன்மை அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம்.

தைராய்டு சுரப்பியின் அதிகப்படியான அல்லது குறைவான செயல்பாட்டின் காரணமாகவும் முடி அதிகமாக கழன்று விடுகின்து.

சில நோய்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளும் மருந்துகளும் முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

நீண்ட நாட்கள் இருக்கும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் முடி கொட்டுவதை அதிகரிக்கின்றது. முக்கியமாக 10 & 12 வது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இதனால் முடி உதிர்வு அதிகமாக உள்ளது.

புரதச்சத்தும், இரும்புச்சத்தும் முடிகளின் வளர்ச்சி சுழற்சி முறையில் முக்கிய பங்கு வகுக்கின்றது. இந்த சத்துகள் குறைவதால் சுழற்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு முடிகள் சீக்கிரமே கொட்ட ஆரம்பிக்கின்றன.

முன்பு எல்லாம் பெண்களுக்கு ஆண்களைப் போல் முடி சுத்தமாக கொட்டி விடாமல் முடியின் அடர்த்தியும் பருமனும் குறைந்து மெலிந்து விடுவதோடு நின்று விடும். ஆனால் தற்போது ஆண்களை போலவே பெண்களுக்கும். தலைமுடி முழுவதுமாக கொட்டுவது அதிகரித்து வருகின்றது.

பெண்களுக்கு சினைப்பை கட்டிகள், கருவுற்று இருக்கும் போது குழந்தை பிறந்த பின்பு, போன்ற நிலைகளில் முடி அதிகமாக கொட்டுகின்றது.

பெண்கள் சில வகை சிகை அலங்காரங்களில் முடியை இறுக்கமாக கட்டுவதினால் கூட முடிகள் எளிதாக உதிர்கின்றன.

தடுக்கும் முறைகள்:

பரம்பரையாக முடி கொட்டும் நிலையில் இருக்கும் ஆண்களுக்கு மிகவும் நீளமான முடி, அதன் வேர்க்கால்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதை தவிர்க்க வேண்டும்.

நாம் உபயோகிக்கும் சீப்புகள், பெரும்பாலும் நெருக்கமான பற்களுடன் கத்தி போன்ற முனையுடன் தான் உள்ளது. இதனால் தலைவாரும் போதே கதிர் அறுவடை செய்வது போன்று தலைமுடியை அறுத்துக் கொண்டே வந்து விடுகின்றது. இதைத் தவிர்க்க அகலமான பற்களுடன், மழுங்கிய முனையுடைய சீப்புகளை உபயோகிப்பது நல்லது.

முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அடைப்பை போக்க வீரியம் குறைந்த ஷாம்புகள் கொண்டு வாரம் 1 அல்லது 2 முறை தலையை சுத்தம் செய்தால் போதுமானது. அதற்காக தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பது பிரச்சனையை அதிகரித்துவிடும்.

தலைக்கு தடவும் எண்ணெய் மற்றும் ஷாம்பூகளை விளம்பரங்களை பார்த்து அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க கூடாது. இது கண்டிப்பாக முடி உதிர்வதை அதிகரிக்கும்.

உடலுக்கு போடும் சோப்பை தலைக்கு போட்டு குளிப்பதை நிறுத்த வேண்டும்.

ஈரமான தலைமுடி மிக எளிதாக உதிரும் தன்மையுடையது. ஈரத்தலையில் சீப்பு வைத்து வாருவது, துண்டால் அழுத்தமாக தலை துவட்டிக் கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

முடியை இறுக்கிக்கட்டும் சிகை அலங்காரங்களை ஒதுக்கி, தளர்வான சிகை அலங்காரங்களை போட்டுக் கொள்ளலாம்.

நீர்சத்து குறைபாடு முடி கொட்டுவதை அதிகரிக்கும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைய உள்ள உணவுப் பொருட்களை தினமும் தேவையான அளவு. உட்கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மருத்துவ தீர்வு:

தலை வழுக்கை ஆவதை தடுக்க முடியுமா?

முடியும், இளம் வயதில் பரம்பரை காரணமாக முடி ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே, உட்கொள்ளும் ஒருங்கிணைந்த மருத்துவ முறை மருந்துகள் மூலமாக கட்டுப்படுத்தி எந்த  நிலையாக இருந்தாலும், முடி கொட்டுவதை நிறுத்தி அடுத்த நிலைக்கு போகாமல் தடுக்கலாம். அதாவது இருப்பதை கண்டிப்பாக காப்பாற்றிக் கொள்ளலாம். மேலும் முடி கொட்டிய இடத்தில் வயதைப் பொறுத்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். வயதான பின்பு வருவதை தடுக்க முடியாது

பரம்பரை காரணமாக முடி கொட்டினாலும் கூட. மருந்துகள் மூலம் முடி கொட்டுவதை குறைத்து. முடி மெலிவதை தடுத்து, முடியின் பருமனை அதிகரிப்பதின் மூலம் சிறு வயதிலேயே ஏற்பட இருக்கும் பாதிப்பை பல வருடங்களுக்கு தள்ளிப் போடலாம்.

எண்ணெய், ஷாம்புகள் மட்டுமே முடி கொட்டுவதை நிறுத்துமா?

முடி கொட்டுவதின் ஆரம்ப நிலையில் எண்ணெய், ஷாம்புகள் பயனளிக்கிறது. ஆனால் அனைவருக்குமே இவை முடி கொட்டுவதை கண்டிப்பாக நிறுத்தும் அல்லது குறைக்கும் என கூற முடியாது. முக்கியமாக பரம்பரை காரணமாக இருந்தால், இவை முடி உதிர்தலை அதிகப்படுத்துகின்றது. அப்படி அதிகமாக முடி கொட்டுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலமாக சரியான தீர்வை அடைந்த பின்பு தான் எண்ணெய், ஷாம்புகள் பயனளிக்கின்றது.

பெண்களுக்கு முடி கொட்டுவதற்கான காரண காரியத்தை ஆராய்ந்து, அதற்கு தருந்தார் போல் ஒருங்கிணைந்த கூட்டு மருந்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதில் மூலம், இந்த தலையாய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

தலைமுடி பிரச்சனைகளை சரி செய்ய சில வகை யோக முத்திரைகள் நல்ல பலனை தருகின்றன.

மன அழுத்தத்தை போக்க யோகா மற்றும் தியானம் மற்றும்  தேவையான அளவு தூக்கம், சமச்சீரான உணவு, நல்ல வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றை தினசரி இயல்பாக வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவத்தில் தலைமுடி கொட்டுவதை தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கும். உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் எண்ணெய்கள், ஷாம்புகள் போன்ற 30 ஆண்டுகளுக்கு மேலாக குணப்படுத்தி நிறுபிக்கப்பட்ட தீர்வுகள் உள்ளன.

×