• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

நிறுவனர் & தலைவர்

சிவா ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் Dr. N. முத்தையன், D.H.M.S., M.D [Hom]., ஹோமியோபதி மருத்துவர் ஆவார், இவர் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டமும் மற்றும் அகமதாபாத் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்

அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த மருத்துவக் கொள்கையில் உறுதியான நம்பிக்கையும் மற்றும் அந்த துறையில் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சிகளையும் செய்து கொண்டு வருகிறார். அவரது மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், ஆரம்பத்திலிருந்தே, மற்ற மருத்துவ முறைகளால் குணப்படுத்தவே முடியாததாக அறிவிக்கப்பட்ட நோய்களையும், நாள்பட்ட நோய்களையும், அறுவை சிகிச்சை தேவைப்படும் பல நோய்களை அறுவை சிகிச்சை இல்லாமலும், ஒருங்கிணைந்த மருத்துவ முறையின் மூலம் சிகிச்சையளித்து, குணப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும், நிபுணத்துவமும் கொண்டவர்.

அவர் தனது மருத்துவப் பணியை 1991 ஆம் ஆண்டு தொடங்கினார்.

Dr. N. முத்தையன், D.H.M.S., M.D [Hom].,

நிறுவனர் & தலைவர்

ஆரம்ப காலத்தில் இவரது மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவ முறையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒரு ஆர்வமுள்ள இளம் மருத்துவராக, அவர் தனது நோயாளிகள் அனைவரும் விரைவாக மற்றும் பூரணமாக குணமடைய வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் நடைமுறையில், அவர் சிகிச்சையளித்த பல நோயாளின் உடல் நல குறைபாடுகளில் ஓரளவு முன்னேற்றம் இருப்பதையும், பூரணமாக குணப்படுத்துவதற்கான வெற்றி விகிதம் திருப்திகரமாக இல்லை என்பதையும் உணர்ந்தார்.

அவர் தனது மருத்துவ முறையின் அனைத்து அம்சங்களையும் முயற்சித்தார்.

சில காலத்திற்குப் பிறகு, அது வரை அவரிடம் மருத்துவத்திற்கு வந்த அனைத்து நோயாளியின் விவரங்களைப் பகுப்பாய்வு செய்ததில், அவர்களில் பலருக்கு, அவர்களின் நிலையில் அவர் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பது தெரியவந்தது.

அவரது கல்லூரி நாட்களில் இருந்தே, அவர் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் அலோபதி போன்ற பிற மருத்துவ முறைகளைப் பயிற்சி செய்யும் தனது மருத்துவரின் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றார்.

அவரது, முன்னேற்றம் இல்லாத நோயாளியின் வரலாற்றைப் பற்றி அவரது மருத்துவ நண்பர்களுடன் கலந்துரையாடும் போது, அவர்களுக்கும், அவர்களது சிகிச்சை முறையில், இதே பிரச்சனையை எதிர்கொண்டது, அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

இந்த மருத்துவ நண்பர்கள், அவர்களின் முன்னேற்றம் இல்லாத நோயாளிகளைப் பற்றியும், அவர்களுடைய மருத்துவமுறையின் செயல்திறன் பற்றியும் விரிவாக கலந்து ஆலோசித்து, விவாதித்த போது, ” ஒரு குறிப்பிட்ட நோயின் சில அறிகுறிகளுக்கு ஒரு மருத்துவமுறையின் செயல்பாடு சிறப்பாகவும், சில அறிகுறிகளுக்கு செயல்திறன் இல்லாமல் இருப்பதாகவும், இதை போன்றே மற்ற மருத்துவமுறைகளின் செயல்பாடுகளும் இருப்பதை அறிந்து கொண்டனர் ”.

தனி ஒரு மருத்துவமுறையில், ஒரு நோயாளி நோயின் தாக்கத்தில் இருந்து முழுமையாக குணமடையாமல் போவதற்க்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

சோதனை முயற்சியாக, தனி ஒரு மருத்துவ முறையால் குணமாகாமல் தோல்வியுற்ற ஒரு தகுதியான நோயாளிக்கு, இரண்டு மருத்துவமுறை மருந்துகளை ஒருங்னைத்து கொடுத்து பார்க்க முடிவு செய்தனர்.

இனி மருத்துவரின் வார்த்தைகளில்

30 வருடங்களுக்கு முன்பு, ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் நாங்கள் சிகிச்சையளித்த முதல் நோயாளிக்கு நாள்பட்ட சைனசிடிஸ் [ Chronic Sinusitis ] நோய் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

அவருக்கு 20 ஆண்டுகளாக அடிக்கடி சளி பிடிப்பது , கடுமையான தலைவலி, எப்போதும் சளி இருந்து கொண்டே இருப்பது, மூக்கில் இருந்து தொண்டைக்கு சளி இறங்குவது, மற்றும் மூக்கு அடைப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு கொண்டு இருந்தார்.

ஒரு முறை அறுவை சிகிச்சை உட்பட அனைத்து மருத்துவ முறைகளையும் அவர் முயற்சி செய்து பார்த்து விட்டார், எந்த மருத்துவத்திலும் அவரது நோய் சரியாகவில்லை.

அந்த நோயாளியின் வரலாற்றை நாங்கள் முழுவதுமாக பகுப்பாய்வு செய்தோம், அவரது எந்தந்த அறிகுறிகளுக்கு எந்தந்த மருந்துவ முறை மருந்துகள் சிறப்பாக செயல்படுகின்றது, நோய் மீண்டும் வராமல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, எங்களுக்குள் விவாதித்து, சித்தா மற்றும் ஹோமியோ மருந்துகளை தேர்வு செய்து இரண்டு மருத்துவமுறை மருந்துகளையும் ஒருங்கிணைத்து, அவருக்கு இந்த புதிய முறை பற்றி விளக்கமளித்து, அவருடைய ஒப்புதலுடன் அவருக்கு கொடுத்தோம்.

அவரை தினமும் எங்களது தொடர் கண்காணிப்பிலேயே வைத்து இருந்தோம். எங்களுடைய ஆச்சரியமாக, 15 நாட்களில் அவருடைய அனைத்து அறிகுறிகளிலிருந்தும் சிறிது சிறிதாக விடுதலை அடைந்தார் மேலும் தொடர் 6 மாத சிகிச்சையில் பூரணமாகவே குணமடைந்தார். அவரது அந்த சைனஸ் பிரச்சனை திரும்ப வரவில்லை.

இனி ஆயுள் முழுவதும் இந்த நோயுடன் தான் நான் அவதிப்பட வேண்டும் என்பது என் விதி என்ற விரக்தி நிலையில் தான் நான் இருந்தேன். ஆனால் என்னை இந்த நோயின் கொடுமையில் இருந்து நீங்கள் காப்பாற்றிய அதிசயத்தை என்னாலே நம்ப முடியவில்லை, மிக்க நன்றி, நன்றி” என ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவர் உணர்ச்சி வசப்படுவதுடன், அவருடைய கதையை மற்றவர்களுக்கும் கூறி, அவரைப் போன்றே பல்வேறு நோயினால் அவதிப்படுபவர்களை, எங்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துக்கொணடே இருந்தார்.

அந்த நோயாளியின் வெற்றி எங்களுக்கு, தீராத நோய்களை குணப்படுத்துவதற்கான புதிய பாதையைத் திறந்தது மட்டுமல்லாமல் எங்களை மற்ற மருத்துவ முறைகளின் நன்மைகளைக் கண்டறிந்து, அதனை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

பின்பு தொடர்ச்சியாக மற்ற மருத்துவ முறைகளில் தோல்வியுற்ற பல நோய்களுக்கும், இந்த ஒருங்கிணைந்த மருத்துவமுறையை முயற்சித்து பார்த்தோம். அதன் வெற்றி சதவிகிதம் எங்களை உற்சாகப்படுத்தியது.

எங்களுடைய தனி மருத்துவ முறை ஒவ்வொரு தனிப்பட்ட நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே வேலை செய்கிறது. அதே நோயின் மீது மற்றொரு மருத்துவ முறையின் நடவடிக்கை, முதல் மருத்துவ முறையால் சரி செய்ய முடியாத பகுதியை சரிசெய்து, இறுதியில் நோயைக் குணப்படுத்துகிறது”, என்ற முடிவுக்கு வந்தோம்.

ஒவ்வொரு மருத்துவத் துறையிலும் உள்ள அனுபவமும், திறமையும் வாய்ந்த, ஒருமித்த எண்ணம் கொண்ட மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைத்து, அவர்களை எங்கள் மருத்துவக் குழுவுடன் இணைத்துக் கொள்கின்றோம்.

அவரவர் மருத்துவ முறைகளில் உள்ள சிறந்த மருந்துகள் என்ன, எந்த நோய்களுக்கு சிறப்பாக வேலை செய்கின்றது, அவற்றின் நன்மை, தீமைகள் மற்றும் அதன் எல்லைகள் பற்றி நாங்கள் விவாதிக்கிறோம்.

ஒவ்வொரு தனிப்பட்ட நோய்க்கும், நோயாளிக்கும்மான சிறந்த மருந்துகளை, அனைத்து மருத்துவ முறைகளிலிலும் இருந்து தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைத்து கொடுக்கும் போது முழுமையாக குணமாவதை ஒவ்வொரு நாளும் எங்கள் கண்முன்னே காண்கிறோம்.

ஒருங்கிணைத்த மருத்துவமுறையின் சிறப்பு பற்றி இப்போது தான், சில வருடங்களாக உலகம் முழுவதும் பேச ஆரம்பித்து உள்ளார்கள். ஆனால் நாங்கள் 30 வருடங்களுக்கு முன்பில் இருந்தே ஒருங்கிணைத்த மருத்துவமுறையை ஆராய்ந்து இதன் நன்மைகளை உணர்ந்து, அதனை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

எங்களது 30 வருடத்திற்கும் மேலான ஒருங்கிணைந்த மருத்துவ முறை அனுபவத்தினால், பல்லாயிரக்கணக்கான நோயாளிகளை முற்றிலுமாக குணப்படுத்திக்கொண்டு வருகின்றோம் என்பதை தகுந்த மருத்துவச் ஆதாரங்களுடன் நிரூபித்து கொண்டு உள்ளோம்.

×