• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

ஒருங்கிணைப்பு கருத்து

நோயுற்ற ஒருவரின் உடல், மனது, மற்றும் உணர்வுகளின் அறிகுறிகளை முழுமையாக பகுத்தாய்ந்து, அவருடைய ஒவ்வொரு அறிகுறிகளுக்கும், எந்த எந்த மருத்துவ முறையில் உள்ள மருந்துகளின் செயல்பாடு சிறப்பாக குணமாக்குகின்றது என்பதை ஆராய்ந்து, தேர்வு செய்து, அந்த மருந்துகளை ஒருங்கிணைத்து நோயாளிக்கு அளிக்கும் போது, அவர் முழுமையான வழியில் குணமடைகிறார்.

ஒவ்வொரு மருத்துவ முறைக்கும், அதற்க்கே உரிய சாதகங்களும், பாதகங்களும் மற்றும் தனித்தன்மையும் உள்ளது.

நாங்கள் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யோகா, யுனானி, அக்குபஞ்சர், வர்மம், யோக முத்ரா, பிசியோதெரபி மற்றும் அவசர சிகிச்சைக்காக அலோபதி என ஒவ்வொரு மருத்துவ முறையின் சாதகங்களையும், தனித்தன்மையையும் ஒருங்கிணைக்கிறோம்.

உலகில் உள்ள எந்த ஒரு தனி மருத்துவ முறையும், அனைத்து நோய்களின் அம்சங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, நோயை பூரணமாக குணப்படுத்துவதில்லை.

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு, ஒவ்வொரு மருத்துவ முறையின் குணப்படுத்தும் செயல்பாடு, சில மிக சிறப்பாகவும், சில ஓரளவு மட்டுமே சிறப்பாகவும், சில முற்றிலும் பயனற்றதாகவும் இருக்கலாம். இது உலகில் உள்ள எல்லா மருத்துவ முறைக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு தனிப்பட்ட நோய்க்கும், ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே ஒரு மருத்துவ முறை செயல்படுகிறது. அதே நோய்க்கு மற்றொரு மருத்துவ முறையின் செயல்பாடு முதல் மருத்துவ முறையால் சரிசெய்ய முடியாத பகுதியை சரிசெய்து இறுதியில் நோயைக் குணப்படுத்துகிறது.

உதாரணமாக, சிறுநீரகக் கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்துகள் மூலம் கரைக்க வேண்டும் என்றால், அதற்கு அங்கு நான்கு விதமான செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடக்க வேண்டும்.

மருந்துகளின் செயல்திறனால்

மேற்கூறிய நான்கு செயல்களும், நம் உடலில் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தால் மட்டுமே, சிறுநீரகக் கற்களை கரைப்பது மட்டுமல்லாமல், கற்கள் உருவாவதும் தடுக்கப்படும்.

இந்த நான்கு விதமான செயல்பாடுகளில் , எந்த மருத்துவமுறை எந்த செயல்பாட்டை சிறப்பாக செய்கின்றது என்பதை அனுபவரீதியாக ஆராய்ந்து பார்க்கும் போது, இதில் ஆயுர்வேத மற்றும் சித்த மருந்துகளின் செயல் திறன், கற்களை கரைப்பது மற்றும் வெளித்தள்ளுதல் செயல்களை மிக சிறப்பாக செய்கின்றது.

அடிப்படை காரணத்தை சரிசெய்தல் மற்றும் தடுப்பு பகுதிகளை ஹோமியோ மருந்துகள் மூலம் முழுமையாக செய்ய முடிகின்றது.

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கு இந்த இரண்டு மருத்துவ முறை மருந்துகளையும் ஒருங்கிணைத்து கொடுக்கும் போது, முழுமையான குணம் விரைவாகவும், பரிபூரணமாகவும் கிடைக்கின்றது.

இதைப் போன்று தான், ஒவ்வொறு நோய் மற்றும் நோயாளியின் அறிகுறிகளையும் ஆராய்ந்து, அதற்கு பொருத்தமான மருத்துவ முறை மருந்துகளை தேர்ந்து எடுத்து, அனைத்து மருத்துவ முறைகளின் நன்மைகளையும் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு தனி நோய்க்கு எதிராகவும் போர் தொடுப்பதன் மூலம் மட்டுமே, நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.

ஒவ்வொரு நோய்க்கும், எங்களது அந்தந்த மருத்துவத் துறைகளில் உள்ள சிறந்த மருத்துவ வல்லுநர்கள் குழு, எங்களது எந்த மருத்துவ முறை எந்த அறிகுறிகளுக்குச் சிறந்தது என்பதை எங்களுக்குள் கலந்து ஆலோசித்து தீர்மானிக்கிறோம்.

அனைத்து மருத்துவ முறைகளிலும் உள்ள, எங்களது மருத்துவ நிபுணர்களின் குழுவிடமிருந்து நாங்கள் அறிவைப் பெறுகிறோம்.

நாங்கள் இங்கு அனைத்து நோய்களையும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் குணப்படுத்துகிறோம், குறிப்பாக மற்ற மருத்துவ முறையில் தோல்வியடைந்த நோய்கள், நாட்பட்ட நோய்கள், சில அறுவை சிகிச்சை நோய்கள் மற்றும் குணப்படுத்த முடியாதவை என்று அறிவிக்கப்பட்ட நோய்கள்.

ஒரே நோயாளிக்கு, பல மருந்துவமுறை மருந்துகளை, ஒரே சமயத்தில் ஒருங்கிணைத்து கொடுத்தாலும், இந்த மருந்துகள் ஒன்றுக்கொன்று எதிர்வினை புரிவதில்லை மற்றும் எந்தவிதமான பாதகமான எதிர்விளைவுகளையும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த எங்களது ஒருங்கிணைந்த மருத்துவ குழு மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஒவ்வொரு நபரையும், உடல், மனம், ஆவி மற்றும் உணர்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு முழு நபராக கருதி, ஒரு முழுமையான வழியில் நோயாளிகளை வழி நடத்துகிறோம்.

இந்த உலகில் உள்ள எந்த மருத்துவ முறையும் மற்ற மருத்துவ முறைகளுக்கு எதிரி அல்ல.

எங்களது நோயாளிகளுக்கு நன்மை செய்யும் எந்த மருத்துவ முறைகளையும், நாங்கள் ஒரு போதும் புறக்கணிப்பதில்லை .

அனைத்து மருத்துவ முறைகளும் மனித குலத்திற்கு நன்மை செய்யவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தீங்கு விளைவிக்கும் மருத்துவ முறை என்று எதுவும் இல்லை.

ஆனால் ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் அதற்கே உரிய அதன் எல்லைகள் உள்ளன. அது அதன் எல்லைகளைத் தாண்டும் போது தான், அந்த மருத்துவ முறை தோல்வி அடைகின்றது.

எங்களது பல்லாண்டு கால மருத்துவ அனுபவத்தின் மூலம், அந்த எல்லைகளை நாங்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளோம்.

ஒருங்கிணைந்த மருத்துவ முறையிலும் எல்லைகள் உள்ளன. ஆனால் தனி ஒரு மருத்துவ முறையுடன் ஒப்பிடும்போது, ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் அதன் எல்லைகள் மற்றும் குணப்படுத்தும் வெற்றி விகிதம் மிகப் பெரியவை.

தனி ஒரு மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத, தோல்வியடைந்த எந்த நோய்களையும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

எங்கள் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை என்பது ஒரு உண்மையான மனித அனுபவம்.

×