One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.
மனித உடலில் இயற்கைக்கு மாறாக கற்கள் உருவாகும் உறுப்புகளில் சிறுநீரகங்கள் ( Kidneys ) முதலிடத்தில் உள்ளது.
பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் காணப்படும் சிறுநீரகக் கற்கள், ஒரு சிறுநீரகத்தில் மட்டுமோ அல்லது இரண்டு சிறுநீரகங்களிலும், சிறுநீரக குழாய்களில் [ Uteters ] மற்றும் சிறுநீரக பையில் [ Bladder ] உருவாகலாம்
நாம் உண்ணும் உணவில் கலந்து காணப்படும் கற்கள் தான் சிறுநீரகத்தில் சென்று அடைத்துக் கொள்கின்றன என்ற கருத்து பலருக்கு உள்ளது. அது தவறு
சிறுநீரகங்கள் இரத்தத்தை சுத்தம் செய்யும்போது சிறுசிறு துகள்களாக, இயல்பான அளவை விட அதிகமாக வேளியேற்றப்படும் தாது உப்புகள், சிறுநீரகத்தில் படிகங்களாக படிந்து கற்களாக உருமாறுகின்றன.
சிறுநீரகக் கற்கள் என்பது திடீரென ஒரே நாளில் உருவாவதில்லை. முழுமையான கற்களாக உருமாறுவதற்கு சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை கூட ஆகலாம்.
ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தை, பலரும் கொண்டிருந்தாலும் சிலருக்குத் தான் கற்கள் உருவாகின்றன, ஏன்?. ஒவ்வொருவர் உடல்வாகும், அவர்கள் உடலில் மாறுபட்டு நடக்கும் வேதியியல் மாற்றங்களே இதற்கு அடிப்படை காரணம்.
வெயிற்காலத்தில் உடலில் உள்ள நீர் வியர்வையாக அதிக அளவில் வெளியேற்றப்பட்டு, சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு குறைவால் தான் வெயிற்காலத்தில் கற்கள் எளிதாக உருவாகின்றன
சில குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் அதிகமாக சிறுநீரக கற்களினால் பாதிக்கபடுவதற்கு காரணம், அவர்கள் உபயோகப்படுத்தும் நிலத்தடி நீரில் உள்ள தாது உப்புகளின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருப்பதினால்தான்.
அரபுக்குடியரசு போன்ற வெயிற் சூடு அதிகமுள்ள நாடுகளுக்கு, இங்கிருந்து வேலைக்கு சென்றுள்ள பலர், சிறுநீரக கற்களினால் அவதிக்குள்ளாகி வேலையை கூட தொடர முடியாமல் தாய்நாடு திரும்பும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
பாரா தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பது, தவறான உணவுப் பழக்கம். பிறவியிலேயே மரபணுக்களில் காணப்படும் சில குறைபாடுகளினாலும் கற்கள் உருவாகின்றன.
சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத்தில், சிறுநீரக குழாயில் அல்லது சிறுநீர்ப்பையில் உருவாகி, அவை தங்கும் இடத்தை பொருத்து தான் ஒரு அறிகுறிகளும் மாறுபடுகின்றன.
சிறுநீரக கற்களினால் உண்டாக்கப்படும் அறிகுறிகளில் மிகவும் முக்கியமானது வலி தான்.
கற்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது தான் மிகவும் கடுமையான வலியை உண்டாக்குகின்றன.
இடுப்பு பகுதியில் திடீரென தோன்றும், கத்தியால் வெட்டுவது போன்ற உணர்வுள்ள கடுமையான வலி, அலை அலையாக, உட்புறமாக. கீழ்நோக்கி, உடலின் முன் பகுதியில் தொடைகள் சேருமிடம் வரையிலும் பரவி, தாங்க முடியாத வேதனையை உண்டாக்கும். சில மணி நேரங்கள் வரை கூட நீடிக்கும் இந்த வலியின் போது படுப்பது, நடப்பதும், உட்காருவது போன்ற பல நிலைகளில் இருந்து பார்த்தாலும் வலியிலிருந்து விடுதலை கிடைக்காது. கற்கள் நகருவது நின்ற பின்பு தான் வலி குறைய ஆரம்பிக்கும்.
சிறுநீரக கற்கள் உண்டாக்கும் வலியை பெண்களின் பிரசவ வலியோடு ஒப்பிடலாம்.
வலியுடன் சேர்த்து வாந்தி, குமட்டல், வயிறு உப்புசம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேற்றமும் இருக்கும்.
ஆரம்பத்தில் தோன்றும் மிதமான வலியையும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும். வாயுப்பிடிப்பு அல்லது நீர் சுளுக்கு தான், தானாகவே சரியாகி விடும் என தாங்களாகவே முடிவு செய்து அசட்டையாக இருப்பதால்தான் கற்கள் பெரிதான பின்பு ஏற்படும் அவதிகளை தவிர்க்க முடியாமல் கின்றது.
ஹோமியோ, சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளின் ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவத்தின் மூலம், கற்கள் சிறுநீரகங்கள் , சிறுநீரக குழாய்கள், சிறுநீர்ப்பை என எங்கு இருந்தாலும் எந்த வித தொல்லைகளும் இல்லாமல் எளிதாக வலியில்லாமல் கரைக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், கற்கள் திரும்ப உருவாகாமல் தடுக்கவும் முடியும்.
சிறுநீரக கற்களை பொருத்த வரையில் இந்த கூட்டு மருத்துவத்தின் செயல்பாடு நான்கு வகையாக அமைந்துள்ளது.
1. கரைத்தல் :
கற்கள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் இந்த கூட்டு மருந்துகளின் செயல்திறனால் சிறுசிறு துகள்களாக உடைக்கப்பட்டு விடுகின்றது. இதனால் கற்கள் அப்படியே வெளிவருவதால் உண்டாகும் கடுமையான வேதனையை தவிர்க்க முடியும்.2. வெளித்தள்ளுதல் :
சிறு சிறு துகள்களாக கரைத்த கற்களை எந்த வித வலியையும் உண்டாக்காமல் எளிதாக சிறுநீர் வழியாக வெளித்தள்ளப்பட்டு விடுகின்றன. கற்கள் வெளியேறிய உணர்வு கூட தெரியவதில்லை.3. மூல காரணத்தை சரி செய்தல்:
மருந்துகளின் ஆற்றலினால் கற்கள் உருவாக மூல காரணமாக இருக்கும் மாறுபட்ட வேதியியல் மாற்றங்கள் சரி செய்யப்பட்டு விடுகின்றன.இந்த நான்கு விதமான செயல்பாடுகளில் , எந்த மருத்துவமுறை எந்த செயல்பாட்டை சிறப்பாக செய்கின்றது என்பதை அனுபவரீதியாக ஆராய்ந்து பார்க்கும் போது, இதில் ஆயுர்வேத மற்றும் சித்த மருந்துகளின் செயல் திறன், கற்களை கரைப்பது மற்றும் வெளித்தள்ளுதல் செயல்களை மிக சிறப்பாக செய்கின்றது.
அடிப்படை காரணத்தை சரிசெய்தல் மற்றும் தடுப்பு பகுதிகளை ஹோமியோ மருந்துகள் மூலம் முழுமையாக செய்ய முடிகின்றது.
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கு இந்த இரண்டு மருத்துவ முறை மருந்துகளையும் ஒருங்கிணைத்து கொடுக்கும் போது, முழுமையான குணம் விரைவாகவும், பரிபூரணமாகவும் கிடைக்கின்றது.
இந்த ஒருங்கிணைந்த மருத்துவத்தில் கற்கள் சிறுநீரகத்தில், சிறுநீரக குழாயில் என எங்கு இருந்தாலும், 20 மில்லி மீட்டர் [ 20 MM ] அதாவது 2 சென்டி மீட்டர் [ 2 CM ] வரையுள்ள கற்களை அறுவை சிகிச்சை மற்றும் அதிர்வலை சிகிச்சை இல்லாமலேயே, மருந்துகள் மூலமாகவே கரைக்க முடியும்.
சிலருக்கு சிறுநீரக கல் அடைப்பினால், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக குழாய்களில் சிறுநீர் தேக்கமடைந்து வீக்கம் [ Hydronephrosis ] ஏற்படலாம். கற்கள் கரையும் போது அடைப்பு நீக்கப்பட்டு விடுவதால், வீக்கம் உடனே தானாகவே சரியாகி விடுகின்றது.
சிறுநீரக கற்களினால் மட்டுமே, சிறுநீரக செயலிழப்பு [ Renal failure ] ஏற்படாது.
கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கும். கற்கள் உருவான பின்பு அதை மருந்துகள் மூலம் எளிதாக கரைத்து வெளித்தள்ளவும், தேவையான அளவு சிறுநீர் வெளியேற்றம் இருக்க வேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு சுமாராக மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஏராளமாக தண்ணீர் அருந்துவது உண்டு. ஆனால், ஆண்டுக்கணக்கில் இப்படி தண்ணீர் குடிப்பது தொடர்ந்தால், அது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை நீர்த்துப்போகச் செய்யும். குறிப்பாக, இரத்தத்தில் இருந்து தேவையான நீரை பிரித்து எடுக்கும் தன்மை சிறுநீரகத்தில் குறைய வாய்ப்புண்டு. முக்கியமாக அளவுக்கு அதிகமாக எப்போதும் தண்ணீர் குடித்து கொண்டே இருப்பவர்களுக்கு, சில காலத்திற்கு பின்பு தண்ணீரை பார்த்தாலே வெறுப்பு ஏற்படுகின்றது
சிறுநீரகக் கற்களுக்காக மருந்துக்கள் எடுத்துக் கொள்ளும் போதே உண்ணாமல் தவிர்த்து வந்த தாது உப்புகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சிறிது சிறிதாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அப்போது தான் அந்த உணவுகளை உடல் ஏற்றுக் கொண்டு, கற்கள் திரும்ப உருவாவதை தடுக்கும். இதனால் இந்த மருந்துகள் எடுக்கும் போது உணவுப் பத்தியம் இருக்கத் தேவையில்லை.
பின்விளைவுகள். பக்க விளைவுகள் இல்லாத ஒருங்கிணைந்த கூட்டு மருத்துவமுறையினால், சிறுநீரக கற்களில் இருந்து குணமடைந்த ஆயிரக்கணக்கானவர்களின் தகுந்த மருத்துவ ஆதாரங்களை கொண்டு கற்கள் கரைவது நிருபிக்கப்பட்டுள்ளது.
கற்கள் புதிதாக உருவாகி இருப்பவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே அறுவை சிகிச்சை, அதிர்வலை சிகிட்சை செய்து கற்களை அகற்றினாலும், கற்கள் திரும்ப திரும்ப தோன்றிக்கொண்டே இருப்பவர்களுக்கும் இந்த கூட்டு மருத்துவமுறை உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான்