• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

ஆண்மைக்குறைவு
(Impotency)

ஆண்மைக்குறைவு (Impotency) என்பது ஒரு ஆண் உடலாலும், மனதாலும் ஒரு முழுமையான உடலுறவு செயல்பாட்டில் ஈடுபட முடியாமல் போவதை குறிக்கும்.

உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை குறைவாக அல்லது இல்லாமல் இருப்பது (Erectile dysfunction), விந்து முன்கூட்டியே விரைவாக வெளியேறுவது (Premature ejaculation) போன்ற செயல்திறன் குறைபாடுகள் மற்றும் மனதளவில் உடலுறவு பற்றிய எண்ணங்களோ , தூண்டுதலோ சிறிதும் இல்லாமல் இருப்பது தான் இதன் முக்கியமான அறிகுறிகள்.

ஆண்மைக்குறைவு என்பது உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஒரு பேரிடர் மற்றும் மனதில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இது மனச்சோர்வு, கூடுதல் மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை மற்றும் குறைந்த சுயமரியாதையை உங்களுக்கு உள்ளே ஏற்படுத்தும்.

விறைப்புத்தன்மை குறைபாடு (Erectyle Dysfunction)

அறிகுறிகள்

ஒரு முறை உங்களால் விறைப்புத்தன்மையை அடைய முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் விறைப்புத்தன்மையை அடைய முடியாது என்று நீங்கள் பயப்படலாம். இந்த செயல்திறன் கவலை ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்.

ஏறக்குறைய வயது வந்த ஆண்கள் அனைவருக்குமே, தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஆண்மைகுறைவின் ஒரு அறிகுறியையாவது உணர்ந்து இருப்பார்கள். ஆனால் அது நிலையானது அல்ல. சில நாட்களில் அல்லது சிறிது காலத்தில் நமது உடலும், மனதும் தன்னைத்தானே சரி செய்து கொண்டு, அதிலிருந்து மீண்டு, மீண்டும் இயல்பான பாலியல் நிலைக்கு வந்து விடுகின்றது. ஆனால் இந்த ஆண்மைகுறைவின் நிலை தொடருமாயின், அவர்களுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப மருத்துவ உதவி கண்டிப்பாக தேவைப்படுகின்றது

விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கு இளவயது மற்றும் வயதான ஆண்கள் என்ற வேறுபாடு கிடையாது.

சமீபத்தில் 85 வயதான ஆண் ஒருவர் ” எனக்கு இப்போது ஒரு மாதமாக விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கின்றது. எனக்கு இது வரை இந்த மாதிரி ஏற்பட்டது இல்லை. எப்படியாவது சரி பண்ணுங்கள் ” என்று கவலையோடும், ஆற்றாமையோடும் சிகிச்சைக்கு வந்தவரும் உண்டு.

ஆணுறுப்பு விறைப்புத்தன்மை என்பது உறுப்பின் இரத்த குழாய்களில், இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதும், அந்த இரத்தத்தை உடலுறவு முடியும் வரை வெளியேறாமல் தேக்கி வைப்பதாலும் தான் ஏற்படுகின்றது. ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு, இந்த இரத்த ஓட்ட குறைவுகளே முக்கியமான காரணம்.

இந்த இரத்த ஓட்டத்தை குறைக்கும் மற்றும் தடுக்கும் காரணிகள்
  • நாள்பட்ட மற்றும் கட்டுக்குள் இல்லாத சர்க்கரைநோய் [Diabetes].
    • நீரிழிவு நோய் மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு இரண்டும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை.
    • மோசமான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மிக இளம் வயதிலேயே பாலியல் செயல்பாட்டை நிரந்தரமாக அழித்துவிடும்,
  • ஆணுறுப்பில் இரத்த குழாய்கள் சுருங்குவது மற்றும் கடினத்தன்மை அடைவது [Atherosclerosis]
  • ஆண்குறியிலிருந்து இரத்தத்தை மிக விரைவாக வெளியேற்ற அனுமதிக்கும் தவறான நரம்பு பிரச்சனைகள் .
  • ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
  • பாலியல் செயல்பாட்டிற்கு உடலை விட மனது பிரதானமானது. மூளையில் இருந்து பாலியல் தூண்டுதல் இல்லாமல் போவது ஒரு முக்கியமான காரணம்.
  • உளவியல் காரணங்களான மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பதற்றம், நீங்கள் தகுதியானவர் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை உணர்வு, பாலியல் பயம் , உங்கள் மனைவி அல்லது துணையினால் நிராகரிப்பு அல்லது அவமதிப்பு, குழந்தை பருவ பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் என்னால் முழுமையாக செயல்பட முடியுமா என்ற செயல்திறன் கவலை ஆகியவை அடங்கும்.
  • டெஸ்டோஸ்டெரோன் [Testosterone] எனப்படும் ஆண்மை ஹார்மோன், ஆண்களின் பாலியல் செயல்பாட்டிற்கு முக்கியமான ஹார்மோன். இது பல காரணங்களினால் உடலில் குறையும் போது உடலாலும், மனதாலும் பாலியல் குறைபாட்டை உண்டாக்குகின்றது.
  • விறைப்புத்தன்மைக்கு வழிவகுக்கும் இரத்த குழாய் செயல்முறைகள் நமது நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சில நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் நரம்பு சமிக்ஞைகளை குறைக்கின்றது.
  • உங்கள் துணையுடன் மோசமான பாலியல் தொடர்பு மற்றும் பாலியல் விருப்பங்களில் உள்ள வேறுபாடுகள் தூண்டுகோல் காரணமாக அமையலாம்.
  • சில வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், விறைப்புத்தன்மை குறைபாடு உள்ள ஆண்களில் 90% பேருக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டெரோல், மது மற்றும் போதைக்கு அடிமையாதல், புகைபிடித்தல் போன்ற ஆபத்து காரணிகளில் ஏதேனும் ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டது.
    • சர்க்கரை நோயினால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவது போன்று பெண்களுக்கும் உடலுறவில் வேறு மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

விந்து முந்துதல் [Premature Ejaculation]

உடலுறவின் போது, உடலுறவுக்கு ஆயுத்தாமாகும் போதே அல்லது ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே விந்து விரைவாக வெளியேறினால் விந்து முன்கூட்டியே விரைவாக வெளியேறும் குறைபாடு (Premature Ejaculation) இருப்பதாக கொள்ளலாம்.

இதை வேறு வகையில் புரிந்துகொள்ள வேண்டுமெனில், உடலுறவின் போது ஆணோ அல்லது அவரது துணையோ விரும்புவதை விட ஆணுக்கு முன்னதாகவே விந்து வெளியேறும் போது ஒரு பாலியல் குறைபாடாக கொள்ளலாம்.

இந்த 30% முதல் 40% ஆண்களை பாதிக்கிறது. அதாவது ஆண்களில் 3 பேரில் 1 பேர் இந்த குறைபாடு தங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

முன்கூட்டிய விந்துதள்ளல் உங்களுக்கும், உங்கள் உடலுறவு துணைவிக்கும் ஒரு வெறுப்பூட்டும் அனுபவமாக மாற்றுகின்றது மட்டுமல்லாமல் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை ஒரு முடிவுக்கும் கொண்டு வந்து விடுகின்றது.

உங்களுக்கு பிடித்த திரைப்படத்திற்கு ஆவலோடு போய் உட்கார்ந்து, படம் ஆரம்பித்து பெயர் ஓடிக்கொண்டு இருக்கும் போதே, படம் முடிந்து போடும் ” வணக்கம் ” போட்டு, படம் முடிந்து விட்டது, கிளம்பலாம் என்ற நிலை தான்.

அறிகுறிகள்
முன்கூட்டிய விந்து வெளியேறுதல் இரண்டு வகைப்படுத்தலாம்:
  • முதல் பாலியல் சந்திப்பில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் நிகழ்கிறது.
  • சில சமயங்களில் மட்டும் நடப்பது.
காரணங்கள்:
  • உடலில் சுரக்கும் பல ஹார்மோன்களின் தாறுமாறான செயல்பாடு.
  • மூளையில் உள்ள செரோடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாக உள்ள ஆண்களுக்கு விந்து விரைவாக வெளியேறுகிறது.
  • விறைப்புத்தன்மை குறைபாடு.
  • அதிக உணர்ச்சியுடைய ஆணுறுப்பு
  • உடலுறவு பற்றிய அதீத கற்பனைகள் மற்றும் மனப்பதட்டம்
  • நரம்புகளின் தாறுமாறான செயல்பாடு
  • நம்மால் சரியாக செய்ய முடியுமா என்ற செயல்திறன் கவலை.
  • புதிய துணை உடனான பதட்டம்,
  • நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் உடலுறவு கொள்வதற்கான கவலை,
  • நம்பிக்கை இல்லாமை
  • குற்ற உணர்வு.
  • மன அழுத்தம்.
  • உறவு சிக்கல்கள்.
  • மனச்சோர்வு.
  • மன பதட்டம்.
  • பாலியல் செயல்திறன் பற்றிய நம்பத்தகாத எதிர்பார்ப்புகள்.
  • பாலியல் அடக்குமுறையின் வரலாறு.
  • உடல் உருவம் பற்றிய தாழ்வு மனப்பான்மை.
  • தற்போதைய உறவில் பிரச்சினைகள் அல்லது அதிருப்தி.

ஆண்மைக்குறைவு குணப்படுத்தக்கூடியதே

ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் விறைப்புத்தன்மை குறைபாடு, விந்து முந்துதல், மனம் சார்ந்த பிரச்சைனைகள் என ஒன்று மட்டுமோ அல்லது அனைத்துமே ஒரு நபருக்கு ஏற்படலாம்.

பிரச்சனையின் காரண காரியத்தை கண்டறிந்து, நோயாளியின் தன்மைக்கும், உடல் மற்றும் மன அறிகுறிகளுக்கு ஏற்ப ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகளை தேர்ந்து எடுத்து, அதனை ஒருங்கிணைத்து கொடுக்கும் போது ஆண்மைக் குறைவை பூரணமாக குணப்படுத்தலாம்.

ஆண்மைக் குறைவின் காரணத்திற்கும் மற்றும் ஒவ்வொரு தனித்தனி அறிகுறிக்கும், எந்த மருத்துவ முறையின் செயல்பாடு மிக சிறப்பாக இருக்கின்றது என எங்களது அந்தந்த மருத்துவத் துறைகளில் உள்ள சிறந்த மருத்துவ வல்லுநர்கள் குழு, எங்களுக்குள் கலந்து ஆலோசித்து, தீர்மானித்து வைத்து உள்ளோம். அந்த மருத்துவமுறை மருந்துகளை தேர்வு செய்து ஒருங்கிணைத்து கொடுக்கும் போது தனி ஒரு மருத்துவத்தால் முடியாததையும், இந்தக் கூட்டு மருத்துவம் முழுமையாக சரி செய்கின்றது.

ஒரே நோயாளிக்கு, பல மருந்துவமுறை மருந்துகளை, ஒரே சமயத்தில் ஒருங்கிணைத்து கொடுத்தாலும், இந்த மருந்துகள் ஒன்றுக்கொன்று எதிர்வினை புரிவதில்லை மற்றும் எந்தவிதமான பாதகமான எதிர்விளைவுகளையும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த எங்களது ஒருங்கிணைந்த மருத்துவ குழு மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு காரணமான இரத்த ஓட்ட தடைகளை சரி செய்வதும், நரம்பியல் தூண்டுதல்களை சீராக்குவதின் மூலம் இந்த குறைபாட்டில் இருந்து மீண்டு விடலாம்.

விந்து முந்துதல் ஒரு குணப்படுத்த கூடிய நிலை தான். விந்து வெளியேறுவதைத் தாமதப்படுத்தும் மருந்துகள், ஆலோசனைகள் மற்றும் நுட்பங்கள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பாலுறவை மேம்படுத்த உதவும்.

பாலியல் பிரச்சனைகளை பொறுத்த மட்டில், உடலும் மனதும் ஒருங்கிணைந்தால் மட்டுமே அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முறை அதனை திறம்பட செய்கின்றது.

அடி வயிறு தசைகள் பலவீனமாக இருந்தால், அது விறைப்புத்தன்மை குறைபாட்டை அதிகரிக்கும். அடிவயிறு தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் நிலைமையை மேம்படுத்தும்.

உடல் பருமன், தொப்பை போன்றவை விறைப்புத்தன்மை ஆபத்தை வரவழைக்கலாம். நேராக நின்று கொண்டு, தலையை குனியாமல் கீழே பார்க்கும் போது, உடலின் இரண்டு உறுப்புக்கள் , தொப்பை மறைக்காமல் தெரிய வேண்டும். ஒன்று காலின் பாதம் மற்றொன்றை நீங்களே கண்டுபிடியுங்கள்.

யோகா, தியானம், யோக முத்திரை போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்திகளை, தினசரி செயல்படுத்தும் வாழ்க்கை முறை ஆக்கிக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான எடையை பராமரிக்க சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

புகை மற்றும் மது பழக்கங்களை நிறுத்த வேண்டும்.

ஆண்மைகுறைவு எதுவாக இருந்தாலும், உங்கள் துணையின் புரிதலும், முழு ஒத்துழைப்பும் இருந்தால் மிக எளிதாக அதிலிருந்து மீண்டு வர முடியும்.

×