சிறு வயதிலேயே பரம்பரை காரணம் எனப்படும் நமது முன்னோர்கள் வழியிலியே, ஆண்களுக்கு வயதான பின்பு கொட்ட வேண்டிய முடி, இள வயதிலேயே அதிகமாகவும், வேகமாகவும் கொட்ட ஆரம்பித்து, தலை வழுக்கை ஆகி விடுகின்றது.
ஆண்களுக்கு இளவயதிலேயே தலை வழுக்கை ஆவது என்?
பரம்பரையாக முடி கொட்டுவது தான் காரணம், சரி வயதான பின்பு தானே முடி கொட்ட ஆரம்பிக்க வேண்டும், உண்மை தான், ஆனால் முன்பு எல்லாம், 60 வயதில் கொட்ட ஆரம்பித்த முடி, சிறிது சிறிதாக 40,.20 வயது என குறைந்து, இப்போது பலருக்கு பள்ளிக்கூடம் போகும் வயதிலேயே முடி கொட்ட ஆரம்பித்து, கல்லூரி முடிப்பதற்குள் தலை முழுவதும் வழுக்கை ஆகி விடுகின்றது.
பரம்பரையாக முடி கொட்டுவது வயதில் வேண்டுமானலும் ஆரம்பிக்கலாம். கொட்ட ஆரம்பித்த பின்பு தலைமுடியை முழுமையாக காலி செய்து, தலையை பாலைவனமாக்கி விட்டு தான் நிற்கும்.
பரம்பரையாக முடி கொட்டுவது சீக்கிரமாகவே ஆரம்பிப்பதற்கான காரணம், நம்முடைய அவசரமான வாழ்க்கை முறையும், நமது அத்தியாவசிய தேவைகளான சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் நீர் போன்றவற்றில் கலந்துள்ள இராசயனங்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போவதும், நமது உடலில் சுரக்கின்ற சில ஹார்மோன்களின் அதிக படியான செயல்பாடுகளும் தான் முக்கிய காரணங்கள்.
சில கடுமையான உடல் குறைவுகளுக்கு பின்பு டைபாய்டு சுரம், டெங்கு, அம்மை, நிமோனியா, புளு சுரம், வயிற்றுப்போக்கு, முக்கியமாக தற்போது கொரோனா போன்ற நோய்கள் வந்து போன பின்பு கடுமையான முடி உதிர்வு ஏற்படும்.
தலையின் தோலில் சுரக்கும் சீபம் எனப்படும் எண்ணெய் பொருள் அதிகமாக சுரப்பதால் அவை முடியின் வேர்கால்களின் அடைத்துக் கொண்டு முடிவளர்வதை தடுக்கின்றது. இதை தான் பொடுகு என்கின்றோம்.
பெம்பாலானவர்கள் முடி கொட்டுவதற்கு காரணமாக காட்டுவது தண்ணீரை தான். தண்ணீரில் உள்ள அமிலகாரத் தன்மை அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம்.
தைராய்டு சுரப்பியின் அதிகப்படியான அல்லது குறைவான செயல்பாட்டின் காரணமாகவும் முடி அதிகமாக கழன்று விடுகின்து.
சில நோய்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளும் மருந்துகளும் முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.
நீண்ட நாட்கள் இருக்கும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் முடி கொட்டுவதை அதிகரிக்கின்றது. முக்கியமாக 10 & 12 வது படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இதனால் முடி உதிர்வு அதிகமாக உள்ளது.
புரதச்சத்தும், இரும்புச்சத்தும் முடிகளின் வளர்ச்சி சுழற்சி முறையில் முக்கிய பங்கு வகுக்கின்றது. இந்த சத்துகள் குறைவதால் சுழற்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு முடிகள் சீக்கிரமே கொட்ட ஆரம்பிக்கின்றன.
முன்பு எல்லாம் பெண்களுக்கு ஆண்களைப் போல் முடி சுத்தமாக கொட்டி விடாமல் முடியின் அடர்த்தியும் பருமனும் குறைந்து மெலிந்து விடுவதோடு நின்று விடும். ஆனால் தற்போது ஆண்களை போலவே பெண்களுக்கும். தலைமுடி முழுவதுமாக கொட்டுவது அதிகரித்து வருகின்றது.
பெண்களுக்கு சினைப்பை கட்டிகள், கருவுற்று இருக்கும் போது குழந்தை பிறந்த பின்பு, போன்ற நிலைகளில் முடி அதிகமாக கொட்டுகின்றது.
பெண்கள் சில வகை சிகை அலங்காரங்களில் முடியை இறுக்கமாக கட்டுவதினால் கூட முடிகள் எளிதாக உதிர்கின்றன.