இயற்கை வழியில் புதிதாக ஒரு உயிரை உருவாக்க முடியாமல் இருப்பதே மலட்டுத் தன்மையாகும். ஆண்களுக்கு ஏற்படுகின்ற மலட்டுத்தன்மை என்பது பெரும்பாலும் விந்தணு குறைபாடு காரணமாகவும், ஆண்மைக்குறைவு எனப்படும் உடலுறவு பிரச்சனைகளினாலும் ஏற்படுகின்றது.
குறைந்தது 12 மாதங்கள் எந்த விதமான கருத்தடை செயல்முறைகளை பயன்படுத்தாமல், இயல்பான உடலுறவு கொண்ட பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால் மட்டுமே அது கருவுறாமை ஆகும்.
இந்த கருவுறாமை எனப்படும் மலட்டுத்தன்மை 40 % ஆண்களுக்கும், 40 % சதவீதம் பெண்களுக்கும் மற்றும் 20 % சதவீதம் இருபாலருக்கும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.