• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

கவனக்குறைவு மற்றும் மிகையியக்க கோளாறு (ADHD)

உங்கள் குழந்தைக்கு மிக அதிக சுறுசுறுப்பும், ஒரு நிலைத்தன்மை இல்லாமலும், மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு சுட்டித்தனமும் இருந்தால், ADHD எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகையியக்க கோளாறு குறைபாடு இருக்கலாம்.

கவனக்குறைவு மற்றும் மிகையியக்க கோளாறு என்பது மூளை நரம்பில் ஏற்படும் ஒருவகை மாற்றம், ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். இதன் முக்கியமான 3 அறிகுறிகள்

கவனக்குறைவு : வயதிற்குரிய கவனம் இல்லாமல் இருப்பது (கவனத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமம்), மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில் சிரமம்.

மனக்கிளர்ச்சி : அடிக்கடி மற்றவர்களின் செயல்பாடுகளில் குறுக்கிடுவது.

அதிவேகத்தன்மை : ஒரு இடத்தில நிலையாக இருக்க முடியாது எப்போதும் ஏதாவது இயக்கத்தில் இருப்பது, பெரும்பாலான நேரங்களில் குறிக்கோள் இல்லாமல் ஓடுவது, குதிப்பது அல்லது ஏறுவது.

பொதுவான காரணங்கள்

  • மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள்
  • பரம்பரை காரணிகள்
  • கர்ப்ப காலத்தில் வந்த தொற்று நோய்கள்
  • மூளை பாதிப்பு
  • செயற்கை உணவு சாயங்கள்

அறிகுறிகள்

  • கவனக்குறைவு, மனக்கிளர்ச்சி, அதிவேகத்தன்மை
  • மிகவும் சுறுசுறுப்பான மற்றும் வம்பு நிறைந்த குழந்தைகள், இதனால் பள்ளி மற்றும் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் இருந்து அதிக புகார்களைப் பெறுவார்கள்.
  • வகுப்பறையிலோ அல்லது பிற சூழ்நிலைகளிலோ ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதில் சிரமம்
  • மற்றவர்களின் உரையாடல்கள், விளையாட்டுகள் அல்லது செயல்பாடுகளில் குறுக்கீடு
  • ஒரு செயலை அமைதியாக விளையாடுவதில் அல்லது செய்வதில் சிக்கல்
  • எந்த ஒரு பணியையும் முடிக்காமல் ஒரு பணியிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல்
  • பள்ளிப் படிப்பில் கவனக்குறைவான தவறுகளைச் செய்வது
  • பணிகள் அல்லது விளையாட்டில் கவனம் செலுத்துவதில் சிக்கல்
  • நேரிடையாகப் பேசினாலும் கேட்கவில்லை என்று தோன்றுதல்
  • அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதில் சிரமம்
  • பள்ளி வேலை அல்லது வேலைகளை முடிக்கத் தவறுதல்
  • பணிகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் சிக்கல்
  • வீட்டுப்பாடம் போன்ற கவனம் செலுத்தும்,மன முயற்சி தேவைப்படும் பணிகளைத் தவிர்த்தல்
  • வேலைகளை மறப்பது
  • இருக்கையில் அமர்ந்திருக்கும்போது கைகள் அல்லது கால்களில் அதிகமாக நடுக்கம்
  • பள்ளி மற்றும் சமூக விளையாட்டுகளில் அவரது முறைக்காக காத்திருப்பதில் சிரமம்

தடுப்பு முறைகள்

  • கர்ப்ப காலத்தில், கரு வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் தவிர்க்கவும். உதாரணமாக, மது, போதைப் பொருட்கள்,தேவையில்லாமல் மருந்துகள்.
  • சிகரெட் புகை மற்றும் ஈய வண்ணப்பூச்சு உள்ளிட்ட மாசுக்கள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும்.
  • இந்தக் குறைபாடுள்ளவர்கள் மூளையை அதிகம் தூண்டும் திறன் கொண்ட இனிப்புப் பொருள்கள், நிறமூட்டப்பட்ட பொருள்கள், ஜங்க்ஃபுட்ஸை குறைவான அளவில் சாப்பிட வேண்டும்.
  • • வாழ்க்கையின் முதல் ஐந்து வருடங்களில் குழந்தைகள் செல்போன், டிவி மற்றும் வீடியோ கேம்களுக்கு அதிகமாக அடிமையாவதைத் தவிர்ப்பது விவேகமானதாக இருக்கும். இந்த மின்னணு சாதனைகளின் அதிகப்படியான உபயோகம், இந்த குறைபாட்டை அதிகரிக்கலாம். கண்டிப்பாக குழந்தைகள் திரையை பார்க்கும் நேரத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

Treatment Methods

  • குழந்தைகளில் ADHD க்கான சிகிச்சையில் மருந்துகள், நடத்தை சிகிச்சை ( Behaviour theraphy ), சமூக திறன்கள் பயிற்சி, பெற்றோர் திறன் பயிற்சி ஆலோசனை ஆகியவை அடங்கும். இந்த சிகிச்சைகள் ADHD இன் பல அறிகுறிகளை விடுவிக்கும்.
  • இதில் மருந்துகள் மிக முக்கியமானது. இந்த ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஹோமியோ மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் கூட்டு செயல்பாடு, கவனக்குறைவு மற்றும் மிகையியக்க கோளாறை முழுமையாக குணப்படுத்துகின்றது. எவ்வளவு சிறுவயதில் இந்த மருந்துகளை கொடுக்க ஆரம்பிக்கின்றோமோ, அவ்வளவு விரைவாக இந்த குறைபாட்டை சரிசெய்ய முடியும். வயது அதிகமாக அதிகமாக முழுமையாக குணமடைவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொன்டே வருகின்றது.
  • மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் தியானம்,யோகா மற்றும் யோக முத்திரைகள்
  • நல்ல நடத்தை அல்லது வேலைக்கான உடனடி வெகுமதிகள்
  • மனம் சார்ந்த பிரச்னைகள் வராமல் தடுக்க குழந்தையைக் குழு விளையாட்டுகளில் ஈடுபட வைக்க வேண்டும்.
  • நடத்தையை மாற்ற முயற்சி செய்வதில் கவனம் செலுத்தும் சிகிச்சை முறைகளுடன் இந்த மருந்துகளை இணைத்து தரும் போது நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • ADHD சிகிச்சையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ முறையில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மிகவும் பாதுகாப்பானது.

சில குழந்தைகள் இயற்கையாகவே மற்றவர்களை விட அதிக செயல்பாட்டு அளவைக் கொண்டுள்ளனர். குழந்தைகள் தங்கள் நண்பர்கள் அல்லது உடன்பிறந்தவர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பதால் ADHD உடையவர்கள் என்று வகைப்படுத்தக்கூடாது. ADHD குழந்தைகளை கண்டறிவதற்கான ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், அறிகுறிகள் வீடு மற்றும் பள்ளி சூழல்களில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

இந்த குறைபாடு உள்ள குழந்தைகளை, உடன் சிறிது நேரம் இருந்தாலே மருத்துவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் பெற்றோர்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை. என்னுடைய மருத்துவமனைக்கே , வேறு தொந்தரவுகளுக்காக வந்த பல குழந்தைகளை 5 நிமிடங்கள் உடனிருந்து பார்த்த பின்பு, பெற்றோரிடம் உங்கள் குழந்தைக்கு ADHD இருப்பது போல தெரிகின்றது, என இந்த குறைபாட்டை பற்றி விளக்கி கூறினாலும், அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. குழந்தை என்றால் துறு துறு என்று தான் இருக்கும்,கொஞ்சம் செல்லமாக வளர்த்து விட்டோம், ரொம்ப நாள் கழித்து பிறந்தது, என பல காரணங்களை கூறி, அதற்க்காக குழந்தையை பைத்தியம் மாதிரி ஏதோ சொல்கின்றிர்களே என என் மீது கடும் கோபத்துடன் திட்டி விட்டு சென்றவர்கள் அனேகம். ஆனால் சில வருடங்கள் கழித்து அதே பெற்றோர்கள் , நீங்கள் அப்போதே சொன்னிர்கள், நாங்கள் தான் கேட்கவில்லை என குற்ற உணர்ச்சியுடன் ADHD குறைபாடு மருத்துவத்திக்காக வருவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

குழந்தைக்கு இந்தக் குறைபாடு வந்துவிட்டால் பார்த்து பயப்படவேண்டியதில்லை. இந்தக் குறைபாடு இருப்பதைக் குழந்தை பருவத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிடலாம். இல்லையென்றால், இந்தக் குறைபாட்டோடு குழந்தை வளர வேண்டியிருக்கும். ADHD பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று, இந்தப் பிரச்னையோடு வளர்கிறது’ என்கிறது ஓர் ஆய்வு!

ADHD குறைபாடு உள்ளவர்கள் மற்ற குழந்தைகளை விட புத்திசாலிகள். ஐ.க்யூ லெவல் [ IQ LEVEL ] என்பது உலகெங்கிலும் புத்திசாலித்தனத்தை கணக்கிடும் ஒரு அளவுகோள் ஆகும். ADHD உள்ளவர்களுக்கு அவர்களுடைய ஐ.க்யூ லெவல் மிகப் பெரிய பலம். சராசரியாக ஒருவருக்கு 100 – 110 வரைதான் ஐ.க்யூ இருக்கும்; ஆனால், ADHD குறைபாடு உள்ளவர்களுக்கு அது 130 – ஐத் தாண்டும்.

இந்த புத்திசாலித்தனத்தை சரியான வழியில் திருப்பி விட்டால் அவர்கள் பின்னாளில் மிகப்பெரிய சாதனைகளை படைப்பவர்களாகவும், அவர்களின் வாழ்க்கையும் மிக சிறப்பாக இருக்கும். அது நம் கையில் தான் உள்ளது.

இதற்கு உதாரணமாக ஒலிம்பிக் போட்டியில் 28 முறை பதக்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ் ( Micheal Phelps ), நடனத்தில் புகழ்பெற்ற கரீனா ஸ்மிர்ன்ஆஃப் ( Karina Smirnoff ), ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் வில் ஸ்மித் ( Will Smith ), புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் ( Stephen Hawkings ) என அவர்கள் துறையில் சாதித்த பலர் கவனக்குறைவு மற்றும் மிகையியக்க கோளாறு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே. இதற்கு எதிர்மாறாக உலகின் மிகப் பெரிய கிரிமினல்கள் சிலரும் இந்தக் கோளாறு உள்ளவர்களே.

×