• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

இயன்முறை மருத்துவம் (Physiotherapy)

இயன்முறை மருத்துவம் என்பது நோய், காயம் மற்றும் குறைபாடுகளை, மருந்துகள் உடன் அல்லது மருந்துகளுக்கு பதிலாக மசாஜ், வெப்ப சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி போன்ற உடலியல் முறைகள் மூலம் சரி செய்யும் சிகிச்சை முறை.

இது உடல் இயக்கத்தை முறைப் படுத்தும் மருத்துவத் துறையாகும்.

ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும்போது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்கும். அப்போது இயன்முறை மருத்துவம் தான் உடற்பயிற்சி மூலம் உடலை இயக்க நிலைக்கு கொண்டு வந்து அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க துணை செய்கிறது.

பிறக்கும் போதே சில குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர். கை, கால் மடிந்து அல்லது பிறந்த பிறகு கீழே விழுந்து பாதிப்படைகிறது. அப்போது அதனை மருந்தால் சரிசெய்ய இயலாது. இயன்முறை மருத்துவம் செய்யப்பட்டு அது சரி செய்யப்படுகிறது. விபத்தால் சிலர் கை, கால் மற்றும் எலும்பு முறிவுகளை அடைகின்றனர். அதனை மீண்டும் பழைய நிலைக்கு இயங்க வைக்க ‘பிசியோதெரபி’ முறை மிகவும் உபயோகமாக உள்ளது.

நன்மைகள்

பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின், பல்வேறு வகையான நிலைமைகளை மதிப்பிடவும், கண்டறியவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் முடியும். அவை :

நரம்பு, தசை, எலும்பு

நரம்பியல்

இருதய நோய்கள்

சுவாச நோய்கள்

நாங்கள் நரம்பு, தசை, எலும்பு, நரம்பியல், இருதய மற்றும் சுவாச நோய்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவத்தின் மருந்துகளோடு, இயன்முறை மருத்துவத்தையும் இணைத்து அளிக்கின்றோம். இதனால் இந்த நோய்களில் இருந்து விரைவாக மீண்டு வரவும், நோயை பூரணமாக குணப்படுத்தவும் முடிகின்றது. மேலும் பாதிப்படைந்தோர், மற்றவர்களை சார்ந்து இல்லாமல், தன்னிச்சையாகச் செயல்படவும், அவர்களது பணியில் மீண்டும் ஈடுபடவும் ஊக்குவிக்கிறது.

×