நோயுற்ற ஒருவரின் உடல், மனது, மற்றும் உணர்வுகளின் அறிகுறிகளை முழுமையாக பகுத்தாய்ந்து, அவருடைய ஒவ்வொரு அறிகுறிகளுக்கும், எந்த எந்த மருத்துவ முறையில் உள்ள மருந்துகளின் செயல்பாடு சிறப்பாக குணமாக்குகின்றது என்பதை ஆராய்ந்து, தேர்வு செய்து, அந்த மருந்துகளை ஒருங்கிணைத்து நோயாளிக்கு அளிக்கும் போது, அவர் முழுமையான வழியில் குணமடைகிறார்.
ஒவ்வொரு மருத்துவ முறைக்கும், அதற்க்கே உரிய சாதகங்களும், பாதகங்களும் மற்றும் தனித்தன்மையும் உள்ளது.
நாங்கள் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யோகா, யுனானி, அக்குபஞ்சர், வர்மம், யோக முத்ரா, பிசியோதெரபி மற்றும் அவசர சிகிச்சைக்காக அலோபதி என ஒவ்வொரு மருத்துவ முறையின் சாதகங்களையும், தனித்தன்மையையும் ஒருங்கிணைக்கிறோம்.
உலகில் உள்ள எந்த ஒரு தனி மருத்துவ முறையும், அனைத்து நோய்களின் அம்சங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, நோயை பூரணமாக குணப்படுத்துவதில்லை.