• 04143-230832 | +91 90475 60630
  • shivaayushhospital@gmail.com
  • Go to English

About Us

One morning, when Gregor Samsa woke from troubled dreams, he found himself transformed in his bed into a horrible vermin. He lay on his armour-like back.

விந்தணுக்கள் உற்பத்திக்கு

ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு (Impotency) மற்றும் மலட்டுத்தன்மை (Infertility) என்பது சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது என்ற மனித குலத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் கான வைக்கின்ற உண்மை, உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி தெரிய வந்துள்ளது.

ஆண்மைக் குறைவு என்பது ஒரு ஆண் மகனால் முழுமையாக திருப்தி கொடுக்கக் கூடிய அளவில் உடலுறவில் ஈடுபட முடியாமையையே குறிக்கும். இந்த குறைபாட்டிற்கு நிறைய உடலியல் மற்றும் மனதியல் காரணங்கள் உள்ளன.

மலட்டுத்தன்மை என்பது ஒரு குழந்தையை உருவாக்கும் தகுதி குறைந்து காணப்படுவதோ அல்லது முழுமையாக இல்லாமல் போவதையோ குறிக்கின்றது.

மலட்டுத் தன்மை என்பது பெண்ணுக்கு மட்டுமே ஏற்படக்கூடியது அல்ல. ஆண்களுக்கும் ஏற்படக் கூடியதே.

ஆண்களுக்கு ஒரு குழந்தையை உருவாக்க முடியாமல் மலட்டுத் தன்மை ஏற்பட, விந்தணுக்களில் காணப்படும் குறைபாடுகளே முக்கிய காரணமாக அமைகின்றது. விந்துப் பரிசோதனை (Semen Analysis) செய்வதன் மூலம் தெரியவரும் குறைபாடுகள்.

  • விந்தில் (Semen), விந்தணுக்களே (Sperm) இல்லாமல் இருப்பது (Azoospermia).
  • விந்தணுக்கள் மிகவும் குறைவாக காணப்படுவது (Oligospermia).
  • விந்தில் விந்தணுக்கள் இருந்தாலும் அவை நகர முடியாமல் துடிப்பற்ற நிலையில் காணப்படுவது. (Sperm Abnormalities)

ஆண்மை குறைவு

ஆண்மை என்ற சொல் ஆண்களின் வீரத்திற்கும், ஆளுமைக்கும், ஒரு குழந்தையை உருவாக்கும் தகுதிக்கும் சங்ககாலம் முதல் கூறப்பட்டு வருவதாகும். ஆனால் ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்து சிறிதுசிறிதாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சமீப காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விபரக் கணக்குகளின் படி, ஆண்களுக்கு ஒரு குழந்தையை உருவாக்கும் தகுதியை கொடுக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கை கடந்த 50 வருடங்களில் பாதிக்குப் பாதியாக குறைந்துவிட்டது.

காரணங்கள்

விந்தணுக்களின் உற்பத்தியில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள்
  • விந்தணுக்களை உற்பத்தி செய்யும் விரைகளில் (Testis) ஒன்று மட்டுமோ அல்லது இரண்டுமோ விதைப்பையில் இல்லாமல் போவது.
  • சிறுவயதில் ஏற்படும் அம்மைகள், பொன்னுக்கு வீங்கி (Mumps) போன்ற வைரஸ் நோய்களின் பின் விளைவுகளால் விரைகள் பாதிக்கப்பட்டு விந்தணுக்கள் உற்பத்தி செய்யும் சக்தியை இழக்கச்செய்வது மற்றும் விந்தணுக்கள் வெளிவரும் மிக நுண்ணிய குழாய்களை சிதைத்து, அடைந்து விடுவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
  • விதைப்பைக்கு உள்ளே குறைவான அளவு வெப்பம் இருந்தால் தான் விதைகளினால் விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும். விரைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உடலில் இயற்கையான தடுப்பு ஏற்பாடுகள் இருக்கும் போதும், மிகுந்த வெப்பத்தை வெளியிடும் கொதிகலன்கள், அடுப்புகள் அருகில் வேலை செய்வது, காற்றோட்டம் இல்லாத இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற காரணங்களினால் விதைப்பையில் வெப்பம் அதிகரித்து விந்தணுகளின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
  • மடிக்கணினி எனப்படும் லேப்டாப் வெளியிடும் வெப்பத்தினால் அதை தொடையின் மீது வைத்து உபயோகிக்கும் போது உயிரணுக்கள் பாதிக்கப்படலாம்.
  • விதைகளில் அடிப்பட்டு இரத்தக்கட்டு உண்டாவது, சில நோய்களினால் விரைகளில் வீக்கம், விதைகளுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய்கள் தடிப்பது ( Varicocele ), விதைப்பைக்குள் அதிகமான அளவு நீர் சேர்வது ( Hydrocele ), விதைப்பைக்குள் விரைகள் திருகிக் கொண்டு இருப்பது, யானைக்கால் நோய் போன்ற குறைபாடுகளினாலும் உயிர் அணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது.
  • முற்றிய காசநோய், நீரிழிவு நோய், பூரணமாக குணமடையாத பால்வினை நோய்கள் போன்ற நோய்களினாலும் விந்தணுக்களின் உற்பத்தி சிறுது சிறிதாக குறைகின்றது.
  • விந்தணுக்கள், மிகவும் நுட்பமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைகின்றது. இந்த வளர்ச்சிக்கு பல்வேறு ஹார்மோன்களின் தூண்டுதல் தேவைப்படுகின்றது. இந்த ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பிகளின் தாறு மாறான செயல்பாட்டினால், உயிரணுக்களின் உற்பத்தியில் பிரச்சனை ஏற்படலாம்.
  • அதிக அளவு சிகரெட்டுகளை புகைப்பது, போதைப் பொருட்களை தொடர்ந்து உபயோகிப்பது, மது பழக்கத்திற்கு அடிமையாவது போன்ற பழக்கங்களினாலும், விந்தணுக்களின் உற்பத்தி குறைகின்றது.
  • விந்தணுக்களின் உற்பத்தியை குறைப்பதில் பெண்மை ஹார்மோன் எனப்படும் ஈஸ்ட்ரோஜன் (Oestrogen) பங்கு அதிகரித்து வருகின்றது.
    செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஈஸ்ட்ரோஜன்கள் கால்நடைகளின் வேகமான வளர்ச்சிக்கும், பால் அதிகமாக சுரப்பதற்கும் செலுத்தப்படுகின்றன. அவ்வாறு பெறப்படும் பாலைக்குடிக்கும் மனிதர்களுக்கும், உடலில் ஈஸ்ட்ரோஜன் சேர்கின்றது. அது மட்டுமல்லாமல் நாம் பயன்படுத்தும் பல அழகு சாதனப் பொருட்கள், ஷாம்புகள், சில பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றின் மூலமாககூட நம் உடலில் சேரும் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து கொண்டே போகின்றது.
  • அதிகரித்து வரும் சுற்றுப்புற சூழல் மாசுக்கள், தொழிற்சாலைகள் கக்கும் விஷப்புகை மற்றும் கழிவுகள், இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவைகளும் மனிதகுலம் உருவாக அடிப்படையான விந்தணுக்களின் உற்பத்தியையே அழிக்கும் தீயசக்தியாக உருமாறியுள்ளன.

மருத்துவ தீர்வு

ஆண்களின் ஆண்மைக்கு ஆபத்தை உண்டாக்கும் ஆண்மை குறைவு மற்றும் விந்தணுக்ககளே இல்லாமல் இருப்பது ,விந்தணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது, விந்தணுக்கள் துடிப்பில்லாமல் காணப்படுவது போன்ற குறைபாடுகளை ஒருங்கிணைந்த மருத்துவத்தின் மூலம் பூரணமாக சரி செய்ய முடியும்.

ஆண்மை குறைவு ஏற்பட காரணமாக இருக்கும் உடலியல் மற்றும் மனதியல் காரணங்களை கண்டறிந்து, மருந்துகளின் துணை கொண்டு அவற்றை வேரோடு களையும் போது குறைவு நீங்கி ஆண்மை நிறைவு ஏற்படுகின்றது.

விந்தணுக்களின் குறைபாட்டை சரி செய்யும் கூட்டு மருத்துவத்தின் செயல்பாடு மூன்று வகையில் அமைந்துள்ளது.

  • மிகவும் சுருங்கிய நிலையில் செயலற்ற தன்மையில் இருக்கும் விரைகளை, செயல்பட வைத்து விந்தணுக்களை உற்பத்தி செய்வது.
  • விந்துக்குழாய்களில் காணப்படும் அடைப்புகளை நீக்குவது.
  • விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பது என்ற வகையில் இருக்கின்றது.

ஆண்களின் மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு போன்ற குறைபாடுகள் மட்டுமல்லாமல், பெண்களின் மலட்டுத்தன்மைக்கு காரணமான பல்வேறு குறைபாடுகளுக்கு , ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளை தேர்வு செய்து, அதனை ஒருங்கிணைத்து கொடுக்கும் போது இந்த கூட்டு மருத்துவத்தின் மூலம் பூரணமாக சரி செய்ய முடியும் என்பதை தகுந்த மருத்துவ ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.

தனி ஒரு மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோய்களையும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் முழுமையாக குணப்படுத்த முடியும்

×